சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் இல்லை ஆய்வை புறக்கணிக்க ஊழியர்கள் முடிவு

Added : மே 24, 2020
Share
Advertisement

தேனி : ''தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் வழங்காததால் ஆய்வு கூட்டங்களை புறக்கணிக்க உள்ளோம்'' என, கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க (டாக்பியா) பொதுச்செயலாளர் காமராஜ்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:மாநிலத்தில் 4,200 தொடக்க கூட்டுறவு சங்கங்கள், 200 நகர வங்கிகள் உள்ளன. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெறும் பயிர்கடன், நகை கடன்களை ஒரு ஆண்டிற்குள் செலுத்தினால் வட்டி இல்லை. இதற்கான வட்டி 7 சதவீதத்தை அரசு மானியமாக வழங்குகிறது. மானியத்தில் 5.20 சதவீதம் மத்திய வங்கிக்கும், 1.80 சதவீதம் கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்க வேண்டும். ஒரு ஆண்டாக வட்டி மானியம் வழங்காததால் சங்கங்கள் நெருக்கடியில் உள்ளன.

விவசாயிகளுக்கு கடன்களை நேரடியாக வழங்க மத்திய வங்கியில் மிரர் கணக்கு துவக்க கட்டாயப்படுத்துகின்றனர். அனைத்து கடன்களும் கூட்டுறவு சங்கம் மூலம் நடைமுறைபடுத்த வேண்டும். வாடிக்கையாளருக்கு 69 காசு வட்டியில் நகை கடன் வழங்கும் மத்திய சங்கம் கூட்டுறவு சங்கங்களுக்கு 76 காசு வட்டி நிர்ணயிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி போல் சங்கங்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும் என 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜூன் முதல் மத்திய கூட்டுறவு வங்கிகள் கேட்கும் புள்ளி விபரங்கள் வழங்காமல், ஆய்வு கூட்டங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X