சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைக்கு தீ: போதை நபர்கள் அடாவடி

Added : மே 24, 2020
Share
Advertisement
 ரேஷன் கடைக்கு தீ: போதை நபர்கள் அடாவடி

பேரூர்:பேரூர் அருகே குடிபோதை யில், ரேஷன் கடைக்கு தீவைத்த ஆசாமிகளை, போலீ சார் தேடி வருகின்றனர்.பூலுவப்பட்டியில் ரேஷன் கடை (க.எண்: 88) செயல்படுகிறது. விற்பனையாளராக காளியப்பன், 50, பணியாற்றுகிறார். நேற்று காலையில் வழக்கம் போல், கடையை திறந்துள்ளார். அப்போது, ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் தீ பிடித்து, இரண்டு மூட்டை அரிசி எரிந்து வீணாகி இருந்தது.ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், ரேஷன் கடை ஜன்னல் வழியே, பிளாஸ்டிக் மற்றும் தென்னை ஓலை வாயிலாக, தீ வைத்தது தெரியவந்தது. கடையின் பின்பகுதியில், 'குடி'மகன்கள் மது அருந்திய பாட்டில்கள், டம்ளர்கள் எரிந்து கிடந்தன. சுற்றுச்சுவர் இல்லாத ரேஷன் கடை வளாகத்தை, பாராக மாற்றிய 'குடி'மகன்கள், போதையில் ரேஷன் கடைக்கு தீ வைத்துள்ளனர். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X