தமிழ்நாடு

டூ பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ. 46.50 கோடி ! நீரை சிக்கனமாக பயன்படுத்த யோசனை

Added : மே 24, 2020
Share
Advertisement
டூ பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ. 46.50 கோடி !  நீரை சிக்கனமாக பயன்படுத்த யோசனை

மதுரை, மதுரை மாவட்டத்தில் 2020-21 நிதியாண்டில் 6500 எக்டேரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.45.50 கோடி மானியம் வழங்கப்படுகிறது.
இம்மாவட்டத்தில் 29,500 எக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நீர் ஆதாரம், மழை பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்ய சொட்டுநீர் பாசன திட்டம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், மற்றவர்களுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன கருவிகள் வழங்கப்படவுள்ளன.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் கூறிய
தாவது: மூன்றாண்டுகளில் 6200 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.45.50 கோடி மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும்
பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் துணை நீர் மேலாண்மை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 997 மின் மோட்டார்கள், 1415 இணைப்பு குழாய்கள், 958 ஆழ்துளை கிணறுகள், 325 தரைமட்ட நீர் சேமிப்பு கட்டமைப்புகள் செய்யப்படும்.
இத்திட்டம் மூலம் காய்கறிகள், பழங்கள், நறுமணப்பயிர்கள், பூக்கள் போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். பயன்பெற விரும்புவோர் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X