ஊராட்சி தலைவரின் தண்ணீர் தானம்

Added : மே 24, 2020
Share
Advertisement

மேலுார், மேலுார் தாலுகா வெள்ளலுாரில் பொதுமக்களுக்கு இலவசமாகதண்ணீர் வழங்குவதுடன்,மரங்களுக்கும் ஊற்றி வளர்த்து வருகிறார், ஊராட்சி தலைவர் கவுசிகன்.இவர் தன்னுடைய ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஊராட்சி முழுவதும் டிராக்டரில் சென்று மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கும் இச்சேவை தொடர்கிறது. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான இடங்களிலுள்ள மரங்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார். கொரோனா ஊரடங்கு துவங்கியது முதல் தினமும் 200 பேருக்கு இலவசமாக உணவும் வழங்குகிறார். கோடை வறட்சி நிலவும்நிலையில் இவர் தாராளமாக தண்ணீர் வழங்குவதுபலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X