சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்..

Added : மே 24, 2020
Share
Advertisement

25 கிலோ கஞ்சா: 2 பேர் கைதுவாடிப்பட்டி: சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் அய்யர், உதயகுமார் மற்றும் போலீசார் பரவை ரோட்டில் ரோந்து சென்றனர். கண்மாய் கரை அருகே நின்ற உசிலம்பட்டி ஆரியபட்டி முத்தையா 55, செல்லுார் காசிநாதன் 53, வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அதில் இருந்த 25 கிலோ கஞ்சா, ரூ.ஆயிரத்து 600ஐ பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.போக்சோவில் வாலிபர் கைதுதிருமங்கலம்: மேலக்கோட்டை சங்கையா மகன் கண்ணன் 24, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துஉள்ளார். அப்பகுதியில் விளையாடிய சிறுமியை கண்ணன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்தார். அவரை திருமங்கலம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.மணல் லாரிகள் பறிமுதல்வாடிப்பட்டி: பாண்டியராஜபுரம் சோதனை சாவடியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் இருந்து கிராவல் மண் அனுமதி சீட்டில் மணல் கடத்தி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X