தமிழ்நாடு

அலுவலகங்களில் கை கழுவும் வசதி: கமிஷனர் எச்சரிக்கை

Added : மே 24, 2020
Share
Advertisement

மதுரை''மதுரையில் அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கை கழுவ வசதி செய்வது கட்டாயம்,'' என, மாநகராட்சி கமிஷனர் விசாகன் எச்சரித்துள்ளார்.அவர் கூறியதாவது:நகரில் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால் கடைகள், நிறுவனங்களுக்கு சீல் வைப்பது, உரிமங்களை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படுவதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசு, தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் வாஷ்பேசின்களில் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும். நுழையும்போதும், வெளியில் செல்லும் போதும் 20 விநாடிகள் கைகளை கழுவ வேண்டும். தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது பொது சுகாதார சட்டம், கொள்ளை நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X