தமிழ்நாடு

மதுரையில் கொரோனா நிவாரணம் தாராளம்

Added : மே 24, 2020
Share
Advertisement

மதுரை, மே 24 -
மதுரையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட எளியோருக்கு பல்வேறு அமைப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
பழங்காநத்தம்
கிருஷ்ணாபுரம்காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் பா.ஜ., சார்பில் வீடு வீடாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் சீனிவாசன், துணை தலைவர் ஹரிஹரன், நிர்வாகிகள் ராஜா, பிரகாஷ், பரமன் உள்ளிட்டோர் வழங்கினர்.
திருப்பரங்குன்றம்
* அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் இங்குள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
* ஹார்விபட்டியில் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. நிறுவனர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் முருகேசன், முத்துராமன், மீனாட்சி சுந்தரம், மனோஜ்பிரபா, அன்பு பங்கேற்றனர்.
* திருப்பரங்குன்றம், புதுார் அம்மா உணவகங்களில் இலவச உணவுடன், அ.தி.மு.க., ஆட்சி 5 ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு இனிப்புகளை அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா வழங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், முருகன், முத்துக்குமார், பன்னீர்செல்வம், பாலமுருகன் பங்கேற்றனர்.
திருமங்கலம்
* மேலக்கோட்டை, திரளி ஊராட்சிகளில் அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். அ.தி.மு.க.,
தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளர் ராஜ்சத்யன், மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழழகன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம் பங்கேற்றனர்.
அலங்காநல்லுார்
* அச்சம்பட்டி அரசு ஆதி திராவிடநல ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் கிளமன்ட் வின்சென்ட் ஜோசப், ஆசிரியர்கள் உதயசந்திரன், கருப்பையா, மனோகரன், ஊராட்சி தலைவர் ஸ்ரீசுதா வழங்கினர்.
உசிலம்பட்டி
* கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட மானூத்து மக்களுக்கு அ.ம.மு.க., சார்பில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாண்டியன், ஊராட்சித் தலைவர்
சின்னச்சாமி மற்றும்
நிர்வாகிகள் அரிசி,
காய்கறிகள் வழங்கினர்.
பேரையூர்
* பேரையூர், டி.கல்லுபட்டியில் பொது மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமசாமி, அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், டாக்டர் பாவடியான்
பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X