குப்பையை
எரிப்பதால் நச்சு
மதுரை மகாத்மாகாந்திநகர் சி.ஆர்.ஓ., காலனி 2வது தெருவில் குடியிருப்பு பகுதிகளில் குப்பையை கொட்டி எரிக்கின்றனர். இதில் கிளம்பும் நச்சு புகையால் மூச்சு திணறுகிறது. துாய்மை பணியாளர்களும் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை.
- கார்த்திகா, மகாத்மாகாந்திநகர்.
குடிநீர்
சப்ளையில்லை
செல்லுார் அய்யனார் கோயில் 5வது தெரு கருமாரியம்மன் கோயில் அருகே 25 வீடுகளில் குழாய்களில் குடிநீர் வருவதில்லை. இங்குள்ள பிட்டர் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.
- சுப்பையா, செல்லுார்.
மின்விளக்குகள்
எரியவில்லை
வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு ஜெய்ஹிந்த்புரம் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட முடியவில்லை. தென்றல் நகர் 3வது தெருவிலும் மூன்றாவது மின் கம்பத்தில் உள்ள மின்விளக்கு சில நாட்களாக எரியவில்லை.
- நிவாஸ், வில்லாபுரம்.
ரேஷனில்
பச்சரிசி இல்லை
திருநகர் ரேஷன் கடை 2ல் பச்சரிசி வழங்கப்படுவதில்லை. நுகர்வோர் விசாரித்தால் அரிசி இருப்பு இல்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர். ரேஷன் கடையை நம்பியுள்ள எங்களை போன்ற ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
- கருக்கன், திருநகர்.