மதுரை, மதுரை மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளை மழை காலம் துவங்கும் முன் விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 56 நீர்நிலைகளை ரூ.31.21 கோடியில் புனரமைக்கும் பணி துவங்கியுள்ளது.
ஆனையூர் கண்மாய் பகிர்மான கால்வாய், வாடிப்பட்டி மணியஞ்சி கால்வாய், குமாரம் கண்மாய் வரத்து கால்வாய், சித்தாலங்குடி புதுக்குளம் கண்மாய், போடிநாயக்கன்
பட்டி பாசன கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
செய்தார்.
நீர்நிலைகளின் எல்லைகளை அளந்து ஆக்கிரமிப்பு
களை அகற்றிடவும், மழைநீர் நீர்நிலைகளில் சேரும் வகையில் வரத்து கால்வாய்களை முறையாக துார்வாரவும் அறி
வுறுத்தினார்.
பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்
சுப்பிரமணியன், உதவி செயற் பொறியாளர்
மொக்கமாயன், உதவி பொறியாளர்கள் மாய
கிருஷ்ணன், செல்லையா, விவசாய சங்க நிர்வாகிகள் உடன் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE