பொது செய்தி

இந்தியா

'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' : ஐ.சி.எம்.ஆர்., புதிய தகவல்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்',  ஐ.சி.எம்.ஆர்., புதிய, தகவல், ICMR, hydroxychloroquine, Indian Medical Research Council, health, Coronavirus, Corona, Covid-19

புதுடில்லி : 'மலேரியாவுக்கு வழங்கப்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்தை, 'கொரோனா' வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மேலும் சில பிரிவினர் பயன்படுத்தலாம்' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
கூறியுள்ளது.


தொற்றுக்கான அறிகுறி




latest tamil news




கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை, 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து தடுப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், 'கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் உள்ளோர், இதை, தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம்' என, ஐ.சி.எம்.ஆர்., ஏற்கனவே கூறியிருந்தது.
இந்நிலையில், அந்த அமைப்பு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள தாவது: கொரோனா அல்லாத மற்ற சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பணியாற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத மருத்துவப் பணியாளர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். மேலும், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள்; வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும், போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினரும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மருந்து எடுத்துக் கொண்டோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது வெகுவாக குறைந்துஉள்ளது, ஆய்வுகளில் தெரிகிறது.


பக்க விளைவு



அதே நேரத்தில், இந்த மருந்தால், சில பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. சிலருக்கு, இதய துடிப்பு விகிதம் குறைவது, உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.கர்ப்பிணிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குழந்தைகள், இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது. டாக்டர்களின் ஆலோசனையைப் பெற்றே, இதை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
26-மே-202009:58:03 IST Report Abuse
Sampath Kumar ஒரு பக்கம் தடை நியூஸ் inorupakm திங்க அட்வைஸ் என்னடா நடுங்குது எங்க makkalai மடையர்கள் என்று நினைத்து விட்டார்கள் இதுக்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மே-202010:34:52 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் நூறு சதவீதம் போலீசுக்கு, வேண்டாம் 99% போலீசுக்கு தொப்பை, ரத்த அழுத்தம், தன்னை விட வலிமை இல்லாதவனை (அதிகாரத்தில்) துன்புறுத்தணும் என்ற மனோவியாதி பீடித்து உள்ளது. அப்படிபட்டவர்கள் சாப்பிட்டால், இதயம் சுக்குநூறாக வெடித்து சாவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X