சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதியதில் 66 ஆடுகள் பலி

Added : மே 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
அரியலுார் : அரியலுார் அருகே, கார் மோதிய விபத்தில், 66 ஆடுகள் உயிரிழந்தன. ஆடுகளை ஓட்டி வந்தவரும் பலியானார். அரியலுார் மாவட்டம், தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ், 52. இவர், ஆடு மேய்க்கும் நான்கு பேருடன் சேர்ந்து, 180 செம்மறி ஆடுகளை, கடலுார் மாவட்டம், சேத்தியாதோப்பிலிருந்து, அரியலுார் மாவட்டம், தேவாமங்கலத்திற்கு ஓட்டி வந்துள்ளார். அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி
 கார் மோதியதில் 66 ஆடுகள் பலி

அரியலுார் : அரியலுார் அருகே, கார் மோதிய விபத்தில், 66 ஆடுகள் உயிரிழந்தன. ஆடுகளை ஓட்டி வந்தவரும் பலியானார்.

அரியலுார் மாவட்டம், தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ், 52. இவர், ஆடு மேய்க்கும் நான்கு பேருடன் சேர்ந்து, 180 செம்மறி ஆடுகளை, கடலுார் மாவட்டம், சேத்தியாதோப்பிலிருந்து, அரியலுார் மாவட்டம், தேவாமங்கலத்திற்கு ஓட்டி வந்துள்ளார். அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி அருகே, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், வெண்ணங்குழி என்ற கிராமம் அருகே அதிகாலை, 1:௦௦ மணிக்கு அவர் வந்த போது, நாய் ஒன்று ஆடுகளை துரத்தியது. ஆடுகள் மிரண்டு, சாலையின் குறுக்கே ஓடின. காமராஜ், அவற்றை கட்டுப்படுத்த முயன்றார்.

அப்போது, விழுப்புரத்திலிருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த, 'மாருதி சியாஸ்' கார், காமராஜ் மீது மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதில், காரில் சிக்கி, 66 ஆடுகள் அதே இடத்தில் உயிரிழந்தன.ஆடுகளை ஓட்டி வந்த சந்திரசேகரன், காரில் வந்த விழுப்புரத்தை சேர்ந்த சேகர் ஆகியோர் காயங்களுடன், ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவரான விழுப்புரம் மாவட்டம், அய்யனாத்துார் கிராமத்தை சேர்ந்த, ராஜாவை, 25, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
27-மே-202007:10:17 IST Report Abuse
natarajan s இது மாதிரியான சம்பவங்கள் E C R யிலும் சகஜம். மாடுகள் அடிக்கடி குறுக்கிடும் அதுவும் கிராமங்களின் அருகில் சாதாரணமாக இது நடக்கும். எல்ல நேரமும் ஒரே மாதிரியாக வண்டி ஓட்ட முடிவதில்லை.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-மே-202013:58:42 IST Report Abuse
Bhaskaran இதில்கார்ஓட்டுநர் மீது தவறு என்ன சொல்ல முடியும் எல்லாம்விதி தான்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
26-மே-202009:24:34 IST Report Abuse
Sampath Kumar ரம்ஜானுக்கு வெட்டி போட்டானுக போல கபோதி பக்கிக .எல்லாம் டாஸ்மாக் மகிமை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X