அரியலுார் : அரியலுார் அருகே, கார் மோதிய விபத்தில், 66 ஆடுகள் உயிரிழந்தன. ஆடுகளை ஓட்டி வந்தவரும் பலியானார்.
அரியலுார் மாவட்டம், தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ், 52. இவர், ஆடு மேய்க்கும் நான்கு பேருடன் சேர்ந்து, 180 செம்மறி ஆடுகளை, கடலுார் மாவட்டம், சேத்தியாதோப்பிலிருந்து, அரியலுார் மாவட்டம், தேவாமங்கலத்திற்கு ஓட்டி வந்துள்ளார். அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி அருகே, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், வெண்ணங்குழி என்ற கிராமம் அருகே அதிகாலை, 1:௦௦ மணிக்கு அவர் வந்த போது, நாய் ஒன்று ஆடுகளை துரத்தியது. ஆடுகள் மிரண்டு, சாலையின் குறுக்கே ஓடின. காமராஜ், அவற்றை கட்டுப்படுத்த முயன்றார்.
அப்போது, விழுப்புரத்திலிருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த, 'மாருதி சியாஸ்' கார், காமராஜ் மீது மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதில், காரில் சிக்கி, 66 ஆடுகள் அதே இடத்தில் உயிரிழந்தன.ஆடுகளை ஓட்டி வந்த சந்திரசேகரன், காரில் வந்த விழுப்புரத்தை சேர்ந்த சேகர் ஆகியோர் காயங்களுடன், ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவரான விழுப்புரம் மாவட்டம், அய்யனாத்துார் கிராமத்தை சேர்ந்த, ராஜாவை, 25, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE