பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் மதுகடைகள் திறக்க கவர்னர் அனுமதி

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மது கடைகள் திறக்க துணை நிலை ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார்.



latest tamil news



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 17 ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன.

தமிழகத்திலும் நேரக்கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மது கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே புதுச்சேரியில் மது கடைகள் திறப்பதற்கு அனுமதி தரப்படாமல் இருந்து வந்தது.


latest tamil news


இதன்காரணமாக தமிழக எல்லையை ஒட்டி உள்ள விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு புதுச்சேரி மாநில மக்கள் மது வாங்க குவிந்தனர். இதனையடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாநிலத்திலும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மது கடைகள் திறப்பதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amirthalingam - pondicherry,இந்தியா
24-மே-202010:28:35 IST Report Abuse
amirthalingam கிரேன் பேடி யை ஆதரித்தவர்களும் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள் . நாராயணசாமிவும் நடிக்கிறார் என்று அவர் மேல் புதுச்சேரி மக்களுக்கு கோவம் உள்ளது . CAA எதிர்த்து நின்ற உறுதி இப்போது இல்லை . மக்கள் அவர் மீது சந்தேகம் அடைந்து உள்ளனர் . மொத்தத்தில் இரண்டு பேர் ராஜினாமா செய்தால் புதுச்சேரி தப்பும் .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-மே-202008:51:45 IST Report Abuse
Sampath Kumar பாவம் நாராயணசாமி எல்லாத்திலும் அரசியில் பாவம் புதுச்சேரி மக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X