சிவகங்கை:''ஊரடங்கு காலத்தில் (60 நாட்கள்) வீட்டில் முடங்கியவர்கள் மனதை சுய சரிதை செய்தால், உளவியல் பாதிப்பு இருக்காது,'' என சிவகங்கை, அரசு மருத்துவமனை மனநல மருத்துவத்துறை தலைவர் டாக்டர். எஸ்.ஜான்சேவியர் சுகதேவ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மனிதன் அனுபவிக்காத புது அனுபவம் ஊரடங்கு. 1918 --- 19ல் பன்றிக்காய்ச்சலில் உலகில் 5 கோடி, இந்தியாவில் 1.75 கோடி பேர் பலியாயினர். அப்போது ஊரடங்கு இல்லை. ஆனால், கொரோனா வைரஸ் 14 முதல் 21 நாட்கள் உயிர் வாழும். சமூக இடைவெளி இல்லாதது, கை சுத்தம் செய்யாதது மூலம் பிறருக்கு பரவும்.
உளவியல் பாதிப்பு இல்லை
வேறு வழியின்றி தான் உலகஅளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு ஒரே தீர்வு முக கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியோடு இருப்பது தான். சமூக வலைதளம் பார்ப்பதன் மூலம் சற்று தங்கள் மன அழுத்தத்தை தவிர்க்கலாம். இது உளவியல் ரீதியாக பாதிப்பை தராது. வீட்டில் இருப்பதால் மன அழுத்தம், தொழில், வருவாயை எப்படி சகஜநிலைக்கு கொண்டு வருவது என்ற கவலை அதிகரித்து, துாக்கமின்மை ஏற்படும்.
இந்த வைரஸ் பற்றி சுகாதாரத்துறை, உலக சுகாதார நிறுவனம், 'யுனிசெப்', தரும் தகவலை மட்டுமே நம்ப வேண்டும். சமூக வலைதளத்தில் வரும் தகவலை நம்ப வேண்டாம்.
மனதின் சக்தி யோகா
இதில் இருந்து மீள புதிய சூழ்நிலைக்கேற்ப நாம் மாற வேண்டும். உடற்பயிற்சி, தியானம், யோகா பயிற்சி மூலம், மனதை புதுப்பிக்க புது சக்தி கிடைக்கும். வீட்டில் நல்ல கருத்து தரும் புத்தகம் படிக்கலாம். மெல்லிசை பாடல் கேட்டு மகிழலாம். குழந்தைகள் முதல் 'டீன்ஏஜ்' வரை திறந்தவெளியில் விளையாடாமல் முன்கோபம், ஆத்திரம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கேரம், பரமபதம், செஸ் போன்று அறிவு, மனநலம் சார்ந்த உள் விளையாட்டு சிறப்பு.மனதை 'சுயசரிதை' செய்சமூக வலைதளத்தை தேவையிருப்பின் குழந்தைகள் பார்க்கலாம். அடிக்கடி பார்ப்பது ஆபத்தை ஏற்படுத்தும். மனதை அவ்வப்போது 'சுயசரிதை' செய்து பார்த்தால், நமக்குள் இருக்கும் மன அழுத்தம், மன உளைச்சல் விடுபட்டு தெளிவு கிடைக்கும். இதன் மூலம் உறவுகளில் ஏற்படும் பாதிப்பு, விரிசல் குறைந்து ஆரோக்கியத்துடன் தெளிவான வாழ்வு பிறக்கும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE