சிவகங்கை:கொரோனா ஊரடங்கு காலத்தில் நிதி ஒதுக்கீடின்றி சிவகங்கை அரசு மருத்துவமனை அம்மா உணவகத்திற்கு வருவோரிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இங்கு உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்திற்கு கடந்த 3 ஆண்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டிய ரூ.65 லட்சத்தை அரசு வழங்க வில்லை. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 60 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இக்கால கட்டத்தில் ஏழை மக்கள், ரோட்டோரம்வசிப்பவர்களுக்கு உணவு கிடைக்க, ஜூன் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதற்கான செலவு தொகையும் நிர்வாகம், அ.தி.மு.க., சார்பில் வழங்கப்பட்டது.நாள் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் செலவழித்து இட்லி, சப்பாத்தி, தயிர், சாம்பார், எலுமிச்சை சாதம் வழங்கினர். அரசு மருத்துவமனைக்கு வந்த ஏராளமானவர்கள் பயனடைந்தனர்.
இந்நிலையில் மே 17க்கு பின் இங்குள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி மே 18 முதல் உணவுக்கு பணம் வசூலிக்கின்றனர். சிவகங்கை பி.டி.ஓ., பழனியம்மாள் கூறியதாவது: சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் உணவிற்கான ரூபாயை வசூலிக்க கூறியதால், வாங்குகிறோம், என்றார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement