சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு மது கடத்திய இருவர் கைது

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கேரளாவுக்கு மது கடத்திய இருவர் கைது

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு, வாகனத்தில் நுாதன முறையில் கடத்தி செல்லப்பட்ட, 163 மது பாட்டில்களை, மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட, இருவரை கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, கேரள எல்லையான செமணாம்பதியில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, கேரளா பதிவெண் உடைய, 'டாடா 407' ரக வேனை சோதனையிட்டனர். அதில், தென்னங்கீற்றுகளை பரப்பி அதன் கீழ், மது பாட்டில்களை பதுக்கி கேரளாவுக்கு கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, ௧௬௩ மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த, 26 மற்றும் 21 வயதுள்ள இருவரை கைது செய்தனர்.

தமிழகத்தில், பல்வேறு டாஸ்மாக் கடைகளில், 'சரக்கு' வாங்கி, கேரளாவுக்கு கொண்டு சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
24-மே-202007:35:50 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பிடிபட்டவர்கள் பெயரை போடவில்லை என்றால் ஊர் அறிந்த உண்மை அவர்கள் யார் எண்டு.. எதுக்குங்க இந்த மூடி மறைப்பு யாரை திருப்தி படுத்த ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X