விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Added : மே 24, 2020
Share
சிவகங்கை:பிளஸ் 2, 1 விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்க வேண்டும், என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் ஏ.சங்கர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடரும்நிலையில் இப்பணியை மேற்கொள்வது சரியில்லை. ஜூலையில் நீட் தேர்வு,ஆகஸ்டில் கல்லுாரி மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு

சிவகங்கை:பிளஸ் 2, 1 விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்க வேண்டும், என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் ஏ.சங்கர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடரும்நிலையில் இப்பணியை மேற்கொள்வது சரியில்லை. ஜூலையில் நீட் தேர்வு,ஆகஸ்டில் கல்லுாரி மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு சுமூகமான மனநிலை இருக்காது. மதிப்பீடு பணி பாதிப்பு ஏற்படும். பிளஸ் 2, 1 மாணவர்களுக்கான தேர்வு முழுவதுமாக முடியவில்லை. அத்தேர்வுகளும் முடிந்த பின் திருத்தும் பணியை ஜூலைக்கு பின் துவக்கலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X