சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை, 'சாக்லேட்'கள் பல்லடத்தில் பறிமுதல்

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 போதை, 'சாக்லேட்'கள் பல்லடத்தில் பறிமுதல்

பல்லடம் : பல்லடம் அருகே பதுக்கி வைத்திருந்த, போதை, 'சாக்லேட்'களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சின்னக்கரை பகுதியில், ஒடிசாவை சேர்ந்த, ம்ருத்யஞ்ஜய ரவுத் என்பவரின், 'மா நாயனா ஸ்டோர்' என்ற மளிகை கடையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, கடை மற்றும் அருகிலுள்ள குடோனில், போதை சாக்லேட்கள், மாத்திரைகள், பான் மசாலா, குட்கா பொருட்கள், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், அவரது குடோன் மற்றும் மளிகை கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

மளிகை வியாபாரி, 30 ரூபாய்க்கு, போதை சாக்லேட் பாக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளார். மளிகை கடை அருகே, தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதனால், மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகும் அபாயம் உள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை, கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து, கடை உரிமையாளர் கடத்தி வந்துள்ளார். மளிகை கடை என்ற பெயரில், குடோனில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
24-மே-202017:17:56 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த சோதனையை தமிழகமெங்கும் வட இந்தியர்கள் நடத்தும் கடைகளில் செய்யவேண்டும். கைனி தம்பக்கூ குட்கா போன்ற பொருட்களை பயன்படுத்தும் அவர்கள்தான் அந்த பழக்கங்களை தமிழகத்தில் பரப்பிவிட்டுள்ளார்கள், கைனி தம்பக்கூ குட்கா போன்றவற்றை உபயோகப்படுத்தும் ஆட்டோ திரிவார்கள், ஷேர் டாக்ஸி ஓட்டுபவர்கள் கூலி தொழிலாளிகள் கட்டுமான வேலை செய்வோர் மிக மிக அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X