ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தின் பல்வேறு ரோடுகளின் ஓரத்தில் உள்ள மணல்குவியல்களால் இரு சக்கரவாகனங்களில் செல்லும் வாகனஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். இதை அகற்ற ஊரடங்கு காலமான இந்நேரத்தில் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதிக வாகனபோக்குவரத்து அதிகம் உள்ள தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் , கிராம சாலைகளின் இருபுறமும் அதிகளவில் மணல் குவிந்து கிடக்கிறது. வணிக நிறுவனங்கள் முதல் ரோட்டோர டீக்கடைகள் வரை தங்கள் கடை முன்பு மண்களை கொட்டி ரோட்டை உயர்த்தி விடுகின்றனர். மணல் லாரி,டிராக்டர்கள் செல்லும்போது சிதறும் மணல்கள் ரோட்டில் சிதற இருபுறமும் தேங்கி வருகிறது. அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சிலர் உயிர்ப்பலிக்கும் ஆளாகுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் பல இடங்களில் மணல்தேங்கி கிடக்கிறது. பலமாதங்களாக இதேநிலை நீடித்து வருகிறது . ஊரடங்கால் போக்குவரத்து இல்லாத இந்நிலையில் மணல்குவியல்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முன் வர வேண்டும்.
அவசியம் நடவடிக்கை
ஊரடங்கு தளர்வால் முதியவர்கள், பெண்கள் என பலர் தினமும் சைக்கிள் ,டூவீலர்களில் சென்று வரும் நிலையில் ரோட்டோர மணல்குவியல்களால் விபத்தில் சிக்குகின்றனர். காலதாமதமின்றி அகற்ற அரசுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-முத்துராமலிங்ககுமார், ஸ்ரீவில்லிபுத்துார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE