ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே புனல்வேலியை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட நெசவாளர்கள் தினக்கூலி அடிப்படையில் அரசின் இலவச சேலை,காடா ரக துணிகளை பெடல் தறி மூலம் உற்பத்தி செய்கின்றனர்.
இங்குள்ள நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்திற்கு கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட பணம் நெசவாளர்களுக்கு போனசாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வழங்கவேண்டிய இதை இது வரை வழங்காததால் இவர்கள் பாதிக்கின்றனர்.
நெசவாளர் முத்துக்கனி: போனஸ் கிடைக்காததால் பழைய கடன்களை அடைக்க முடியாது புதிய கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் வேலையின்றி உள்ள நிலையில் பணம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும். சங்கத்தில் கேட்டால் உரிய பதில் இல்லை, என்றார்.கூட்டுறவு சங்க நிர்வாகத்தில் கேட்ட போது, ஊக்க தொகை வழங்கும் நேரத்தில் ஊரடங்கு வந்ததால் வழங்க முடியவில்லை. விரைவில் வழங்கப்படும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE