ஆமைவேகத்தில் தரைப்பாலம் பணி : அவதியில் வாகன ஓட்டிகள்

Added : மே 24, 2020
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர் நகராட்சி சார்பில் இ.பி., அலுவலகம் எதிரில் பாவாலி ரோட்டில் ஆமை வேகத்தில் தரைப்பால பணிகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் மழைநீர் தேங்கி ரோடும் சேதமடைந்தது. தரைப்பாலம் தாழ்வாக சென்றதால் இதை புதுப்பிப்பது அவசியம் என்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பாலம் கட்டும் பணி துவங்கியது.

விருதுநகர்:விருதுநகர் நகராட்சி சார்பில் இ.பி., அலுவலகம் எதிரில் பாவாலி ரோட்டில் ஆமை வேகத்தில் தரைப்பால பணிகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இப்பகுதியில் மழைநீர் தேங்கி ரோடும் சேதமடைந்தது. தரைப்பாலம் தாழ்வாக சென்றதால் இதை புதுப்பிப்பது அவசியம் என்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பாலம் கட்டும் பணி துவங்கியது.

ஊரடங்கால் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது துவங்கி உள்ளது. இதுவும் ஆமை வேகத்தில் நடக்கிறது. ஊரடங்கு தளர்வால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பக்கவாட்டு பகுதி தரைப்பாலம் உடையும் நிலையில் உள்ளது இதை கருத்தில் கொண்டு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X