பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீருக்கு தவிக்கும் ஏத்தக்கோவில் மக்கள்

Added : மே 24, 2020
Share
Advertisement
 குடிநீருக்கு தவிக்கும் ஏத்தக்கோவில் மக்கள்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியம் ஏத்தக்கோவில் கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்கு தவிக்கின்றனர். டிராக்டர் மூலம் வரும் குடிநீர் குடம் ரூ.5க்கு விற்கப்படுகிறது.

இக்கிராமத்தில் 2500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக உள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்கு இருந்த 4 கிணறுகளும் நீர் சுரப்பின்றி வறண்டு விட்டன. பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டத்தில் இக்கிராமம் கடைசியில் இருப்பதால் குடிநீர் வந்து சேர்வதில்லை. போர்வெல் நீர் மேல்நிலைத்தொட்டியில் ஏற்றி பகுதி வாரியாக வினியோகிக்கின்றனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சில குடங்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் தினமும் தண்ணீருக்காக ரூ.50 முதல்ரூ. 100 வரை செலவழிக்கின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:வாக்குறுதி மட்டுமேஎஸ்.ராதிகா: கடந்த பல ஆண்டுகளாக நிலவும் இக்கிராமத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்கப்படவில்லை. தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் கட்சியினர் உடனே தீர்த்து வைப்பதாக வெறும் வாக்குறுதி மட்டுமே செல்கின்றனர். தண்ணீரை விலைக்கு வாங்கியே குளிக்கவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்த வேண்டி உள்ளது.

மலை அடிவாரத்தில் உள்ள இக்கிராமத்தில் மழைநீரை தேக்கி வைப்பதற்கான குளம், கண்மாய்களும் இல்லை.

காத்திருப்புஏ.ராக்கம்மா:

ஊராட்சி சார்பில் 15 நாளுக்கு ஒரு முறை வரும் நீரை நீண்ட நேரம் காத்திருந்து பிடிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் 10 குடங்கள் நீர் கிடைப்பதே சிரமம். டேங்கர் லாரிகளில் வரும் நீரை ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் ஊற்றி செல்வர். தேவைப்படுவோர் அவ்வப்போது கயிறு கட்டி இறைத்து பயன்படுத்துகின்றனர். சில நாளில் இதுவும் தீர்ந்து விடும்.

ஆடு, மாடுகளின் தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். மழை பெய்யும்போது அனைத்து வீடுகளிலும் நீரை பிடித்து வைத்து சில நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்வர்.

கூடுதல் செலவு

ஏ.பா ண்டியராஜன்: குடிநீருக்காக கிராம மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்க வில்லை. அப்போதுசமாதானம் செய்து அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றனர். பிரச்னைதான் தீர்ந்தபாடில்லை. குன்னுார் வைகை ஆற்றில் இருந்து வரும் நீர் குப்பாம்பட்டியில் தேக்கப்பட்டு, பின்னர் பிரித்து அனுப்பப்படுகிறது.

ஏத்தக்கோவில் கிராமம் கடைசி என்பதால் வந்து சேர்வதில்லை. தனி குழாய் மூலம் கொண்டு வர வேண்டும். உள்ளூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் தண்ணீர் தேவைக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X