பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : மே 24, 2020
Share
Advertisement

சிவகாசி, மே 24-சிவகாசி சிவன் கோயில் வைகாசி திருவிழா நேற்று துவங்க வேண்டிய நிலையில் கொரோனா ஊரடங்கால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் :ஸ்ரீவில்லிபுத்துாரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய தலைவர் ஆரோன்ராஜாமணி தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதுபோல் வத்திராயிருப்பிலும் தலைவர் சுருளி, செயலர் பிச்சுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.........

பணியாளர்களுக்கு உதவிசிவகாசி :திருத்தங்கல் நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஓட்டுனர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. முன்னாள் துணைத் தலைவர் பொன்சக்திவேல், ஆணையாளர் பாண்டித்தாய் வழங்கினர்..'

தொற்று தடுக்க முன்பதிவு


விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்துார் முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு மருத்துவமனை பொறுப்பு அதிகாரி அண்ணாதுரை செய்திக்குறிப்பு: இங்கு பொது மருத்துவர், பல் மருத்துவர் என இருவர் சிகிச்சை அளிக்கின்றனர். பிசியோதெரபி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற வசதிகள் உள்ளன. கொரோனா பரவலால் கூட்டத்தை தவிர்க்க முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

89034 76536 ல் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று சிகிச்சை பெறலாம். மேலும் srivilliputtur@echs.gov.in., echspc_svpr@yahoo.com மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். வருவோர் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், என கேட்டுள்ளார்

வேட்டி சேலை வழங்கல்

சிவகாசி:ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்திய தேசிய லீக் சார்பில் சிவகாசி கண்ணகி காலனி பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. தொழிலதிபர் செய்யது இப்ராஹிம், இந்திய தேசிய லீக் சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X