பொது செய்தி

தமிழ்நாடு

நவீன வசதியில் '108' ஆம்புலன்ஸ்

Added : மே 24, 2020
Share
Advertisement
 நவீன வசதியில்  '108' ஆம்புலன்ஸ்

கூடலுார்:கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய '108' ஆம்புலன்ஸ் வழங்கி பயன்பாட்டிற்கு வந்தது.இங்கு தினந்தோறும் 700 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும் பிரசவம் அதிகம் பார்க்கப்படுகிறது.

அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தலைக்காயம் மற்றும் விபத்துகளில் சிக்கியவர்கள் அனைவரும் இங்கிருந்து கம்பம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அப்பணிக்கான நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் கூடிய '108' ஆம்புலன்ஸ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதற்கான சாவியை வட்டார மருத்துவ அலுவலர் முருகன், ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டியிடம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X