மா  விளைச்சல் இல்லை| Dinamalar

மா  விளைச்சல் இல்லை

Added : மே 24, 2020
Share
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, எரியோடு, ஏ.வெள்ளோடு, கோபால்பட்டி பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா சாகுபடி மானாவாரி, கிணற்றுப் பாசனம் மூலம் நடக்கிறது.போதிய மழையின்றி இவ்வாண்டு காய்ப்பு குறைந்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்கு மாங்காய் கொண்டு செல்வதும் குறைந்துள்ளது. இதனால் இவ்வாண்டு மா சாகுபடியில் எதிர்பார்த்த
 மா  விளைச்சல் இல்லை

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, எரியோடு, ஏ.வெள்ளோடு, கோபால்பட்டி பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா சாகுபடி மானாவாரி, கிணற்றுப் பாசனம் மூலம் நடக்கிறது.

போதிய மழையின்றி இவ்வாண்டு காய்ப்பு குறைந்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்கு மாங்காய் கொண்டு செல்வதும் குறைந்துள்ளது. இதனால் இவ்வாண்டு மா சாகுபடியில் எதிர்பார்த்த விளைச்சலும், வருமானமும் இல்லாமல் போனதாக விவசாயிகள், வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வேம்பார்பட்டி வியாபாரி ஹரிஹரன் கூறியதாவது: பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி வரை மா சீசன் களைக்கட்டும். கடந்தாண்டு தினமும் 20 முதல் 30 டன் வரை மா வரத்து இருந்தது. தற்போது காய்ப்பு குறைவால் 10 டன் முதல் 15 டன் வருகிறது. ஊரடங்கு உத்தரவால் வெளியூர் செல்வதும் குறைந்துள்ளது. ஒரு கிலோ செந்துாரம் -ரூ.30, கல்லாமை- ரூ.15, இமாம்பசந்த் -ரூ.80, பங்கனப்பள்ளி- ரூ.40, கிரேப் ரூ.25, அல்போன்சா ரூ.30 என விலை போகிறது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X