பொது செய்தி

தமிழ்நாடு

காஷ்மீர் சென்ற வியாபாரிகள்: தேக்கடி சுற்றுலா பாதிக்குமா

Added : மே 24, 2020
Share
Advertisement
 காஷ்மீர் சென்ற வியாபாரிகள்: தேக்கடி சுற்றுலா பாதிக்குமா

தேக்கடி:தேக்கடியில் கடந்த 30 ஆண்டாக வியாபாரம் செய்து வந்தகாஷ்மீர் வியாபாரிகள், கொரோனா ஊரடங்கால் சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டனர். இதனால் இங்கு சுற்றுலா பாதிக்கப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். அடர்ந்த வனப் பகுதிக்கு நடுவே உள்ள தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்டு ரசிப்பது தனிச்சிறப்பு. இதனால் கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவர். யானை சவாரி, வனப்பகுதியில் டிரக்கிங்(மலையேற்றம்) உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.


வளர்ச்சி:

தேக்கடி செல்லும் ரோட்டில் காஷ்மீரில் இருந்து வந்த வியாபாரிகள் அதிகமாக கடைகள் வைத்து உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு வரத்துவங்கிய அவர்களில் 140 பேர் இங்கு தங்கி வியாபாரம் செய்து வந்தனர். வெளிநாட்டு பயணிகளை கவரும் கைவினைப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், பீங்கான் பொருட்கள் மற்றும் நவீன உடைகள் ஆகியவை இக்கடைகளில் அதிகம் இருக்கும். இதனால் அப்பயணிகள் வருகையும் அதிகமாகியது. சுற்றுலாவின் வளர்ச்சிக்கு இக்கடைகளும் ஒரு காரணமாகும்.


அச்சம்:

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் இங்கு தங்கியிருந்த 104காஷ்மீர் வியாபாரிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். மீதமுள்ளவர்களும் இன்னும் சில நாட்களில் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக தேக்கடி சுற்றுலா பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேக்கடி ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஷாஜி கூறும்போது, 'ஊரடங்கால் காஷ்மீர் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு இன்னும் சில மாதங்கள்கூட ஆகலாம். நவம்பர், டிசம்பரில்தான் சீசன் துவங்கும். அப்போது மீண்டும் அவர்கள் வந்துவிடுவார்கள்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X