முகக்கவசம், சானிடைசர் விற்பனை அதிகரிப்பு 2 மாதத்தில் 70 சதவீதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம், சானிடைசர் விற்பனை அதிகரிப்பு 2 மாதத்தில் 70 சதவீதம்

Added : மே 24, 2020
Share

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கடந்த இரண்டு மாதங்களில் முகக்கவசம், சானிடைசர் விற்பனை 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்துகின்றனர். திண்டுக்கல்லில் முக்கவசம் இன்றி வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.இதனால் வீட்டை விட்டு வெளியே வருவோர் முகக்கவசம், சானிடைசர் இல்லாமல் வருவதில்லை. அதனால் அவற்றிற்கு கடும் கிராக்கி நிலவுகிறது.

மருந்து கடைகளில் சாதாரண நாட்களில் முகக்கவசம், சானிடைசர் விற்பனை 5 சதவீதம் மட்டுமே இருந்து வந்தது.கொரோனாவால் இவற்றின் தேவை தினமும் அதிகரித்து வருகிறது. சில வாரங்களாக தட்டுப்பாடு இருந்த நிலையில், மருந்துகளுக்கு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பு அதிகமானது. அதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சானிடைசர், முகக்கவசம் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன.

இதனால் கடந்த 2 மாதத்தில் அவற்றின் விற்பனை 70 சதவீதம் அதிகரித்துள்ளது.மருந்து வியாபாரி கூறியது: கொரோனா ஒழியும் வரை முகக்கவசம், சானிடைசர் மிக அவசியம். இவற்றை அத்தியாவசியப் பொருட்களோடு வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. தட்டுப்பாடும் குறைந்துள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X