ஏ.டி.எம்., மையம் மூலம் கொரோனா தொற்று அபாயம்

Added : மே 24, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் ஏ.டி.எம்., மையத்தில் போதிய தடுப்பு நடவடிக்கை இல்லாததால், கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 133 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பணம் வைக்க காலதாமதம், மிஷின் பழுது காரணங்களால் சில ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுவது இல்லை.செயல்படும் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க மக்கள் அதிகமாக கூடுகின்றனர்.

அங்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சானிட்டைசர், கைகழுவும் சோப்பு வைப்பதில்லை. கிருமிநாசினி மருந்து தெளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை சில ஏ.டி.எம்., மையங்கள் கடைப்பிடிப்பதே இல்லை என புகார் எழுந்துள்ளது.இதனால் கொரோனா நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. ஏ.டி.எம்., மையங்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு, கை கழுவுவதை உறுதிப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X