திண்டுக்கல் தோட்டனுத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதி இரண்டலப்பாறை. ஐநுாறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஆண்டு முழுவதும் தண்ணீர் எட்டாக்கனியாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம்எத்தனை ஏற்பாடு செய்தாலும் கோடை காலங்களில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
பாறைகள் சூழ்ந்த இடம் என்பதால் 500 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தும் எந்த பயனும் இல்லை. மாதம் ஒருமுறை 2 மணிநேரம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.அதனால் அத்தியாவசிய தேவைக்கு சிரமப்படுகின்றனர். எனவே 1000 லிட்டர் தண்ணீரை ரூ.250 க்கு வாங்குகின்றனர். அது 4 நாட்கள்கூட தாக்குப்பிடிப்பதில்லை.
கிராம மக்கள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லை. இந்நிலையிலும் குடிநீரை விலை கொடுத்து வாங்குவதால் இதற்கு பெருந்தொகை ஒதுக்குகிறோம். எனவே, மழை நீரை சேமித்தும், வெகுதொலைவு சென்று எடுத்து வந்தும் டிரம்களில் சேமிக்கிறோம். கலெக்டரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் காவிரி கூட்டுக் குடிநீர் அல்லது பெரிய மேல்நிலைத் தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகம் செய்து தரவேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE