பொது செய்தி

தமிழ்நாடு

அய்யா வாங்க; ஆயக்குடி கொய்யா வாங்க: அடிப்படை வசதிதான் 'ஆப்சென்ட்'

Added : மே 24, 2020
Share
Advertisement

ஆயக்குடி:திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயக்குடி அருகே சட்டப்பாறை, அமரப்பூண்டி, ரூக்குவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் பலஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி நடக்கிறது.

இங்கு விளையும் கொய்யா, பழநி மெயின் ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள சந்தை மூலம் தினமும் 10 முதல் 15 டன் அளவுக்கு விற்கப்படுகிறது. கேரள மாநிலம், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்ட மொத்த வியாபாரிகள் வாங்குகின்றனர். அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் செல்கிறது.

இதேபோல சீசன் நேரத்தில் மா, சப்போட்டா, பலா, கொடைக்கானலில் இருந்து பிளம்ஸ், மா, வாழை, திராட்சை, நெல்லி, வெள்ளரி ஆகியவற்றையும் விற்கின்றனர். குறைந்தவிலை, விவசாயிகள் நேரடி விற்பனை என்பதால் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் தினமும் குவிகின்றனர். இதுதவிர பத்துக்கும் மேற்பட்ட பழமண்டிகளும் இங்கு செயல்படுகின்றன.

நகரத்தார் காவடிக் குழுவினர் மற்றும் பேரூராட்சிக்குரிய இடத்தில் இந்த சந்தை அமைந்து உள்ளது. அக்காலத்தில் தைப்பூச நேரத்தில் நகரத்தார் காவடி எடுத்து வரும்போது சந்தை இடத்தில் உள்ள கிணற்றில் குளித்து சென்றனர்.அடிப்படை வசதிகள் அவசியம்ஆயக்குடி சந்தை காலை 6:30 மணிக்கு துவங்கியதுமே பரபரப்பாக பழங்கள் விற்பனை நடக்கிறது. காலை 8:30 மணிக்குள் விற்பனை முடிந்து விடும். அதன்பின், சந்தை வெறும் மைதானமாக காட்சியளிக்கும்.

தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் வந்துசெல்லும் இடத்தில் ஒரு கழிப்பறைகூட இல்லாதது வேதனைக்குரியதே. மழை பெய்தால் சந்தை முழுவதும் சகதிக்காடாகி விடுவதால், பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.கடையோ, ெஷட்டோ இல்லாததால் விவசாயிகள் கொண்டு வரும் பழங்களை மைதானத்தில் வைத்தே நேரடியாக விலைபேசுகின்றனர்.

வாகனங்களை நிறுத்த உரிய இடமில்லாததால், திண்டுக்கல் மெயின் ரோட்டிலேயே வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகையால் ஆயக்குடி சந்தையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும். குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் வலியுறுத்தினர். தேர்தலின் போது ஆயக்குடியில் பெரிய சந்தை, பழச்சாறு ஆலையை ஏற்படுத்தி தருவதாக பல கட்சியினரும் கொடுத்த வாக்குறுதிகள் காற்றோடு கரைந்துவிட்டது.

அரை நுாற்றாண்டை கடந்த சந்தைஆயக்குடி பழமண்டி நெப்போலியன் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான இடைத்தரகர்களும் இல்லாமல் விவசாயிகள், வியாபாரிகள் நேரடியாக பேசி விலையை நிர்ணயம் செய்து பழங்களை வாங்கி செல்கின்றனர். நுழைவுக் கட்டணம், சுங்கவரி எதுவும் கிடையாது. இரண்டே மணி நேரத்தில் டன் கணக்கில் பழவியாபாரம் நடைபெறும் ஒரே இடம் ஆயக்குடி சந்தைதான் என்றால் அது மிகையில்லை.

சந்தை முடிந்த பின்னர், உளுந்து, எள், தட்டைப்பயிர் உள்ளிட்டவற்றை உலர்த்தும் களமாக சந்தை மாறிவிடும். ஆயக்குடி சந்தைக்கு விடுமுறையே கிடையாது. தீபாளி, பொங்கல் என பண்டிகையும், விழாக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் ஒன்றுதான். ஆனால் இப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தற்போது விற்பனை மந்தமாகியுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் சந்தை மூலம் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர் என ஆயிரக்கணக்கானவர்கள் பயன்பெறுகின்றனர்.

இத்தனை சிறப்புமிக்க சந்தையை விரிவுபடுத்தவும், அடிப்படை வசதிகள் செய்துதர அரசு முன்வர வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X