மருத்துவ பணியாளர்களுக்குஉபகரணங்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ பணியாளர்களுக்குஉபகரணங்கள் வழங்கல்

Added : மே 24, 2020
Share

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை பணியாளர்களுக்கு முகக்கவசம், முழுக்கவச உடைகளை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.க்ஷ

திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சீனிவாசன் கொரோனா தடுப்பு உபகரணங்களை அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு வழங்கினார். கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.அமைச்சர் கூறியதாவது: திண்டுக்கல் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு 10 ஆயிரத்து 300 முகக்கவசம், முழுக்கவச உடை வழங்கியுள்ளோம்.

தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படுகிறது. ஆட்டோக்கள் ஓட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.அரசு மருத்துவமனை டீன் விஜயகுமார், இணை இயக்குனர் பூங்கோதை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X