நீதிமன்றத்தில் ஆஜராகிறார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

ஜெருசலேம்: இஸ்ரேலில் அதிக ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரிய பெஞ்சமின் நேதன்யாஹு, தனக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணைக்காக, நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.



latest tamil news



இஸ்ரேலில் பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், ஊழல் விசாரணையை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமராக, 2009ல் இருந்து பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாஹு, 70. இஸ்ரேலில் நீண்ட காலம் பிரதமராக இருப்பவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சமீபத்தில் நடந்த தேர்தலில், இவரது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், பிரதான எதிர்க்கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து, மீண்டும் பிரதமராகியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே, நேதன்யாஹுவுக்கு எதிராக பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. தனக்கு சாதகமாக செய்தி வெளியிடுவதற்காக ஊடக முதலாளிகளுக்கு பணம் கொடுத்தது, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அந்த நிறுவனங்களிடமிருந்து பரிசு என்ற பெயரில் லஞ்சம் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து, இஸ்ரேல் மாவட்ட நீதிமன்றம், அவரை விசாரித்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், பாதுகாப்பு படையினர் புடைசூழ, பெஞ்சமின் நேதன்யாஹு, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர், ஊழல் வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவது, இஸ்ரேலில் இதுவே முதல் முறை. இதனால், இஸ்ரேல் மக்களிடையே, நேதன்யாஹு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
24-மே-202014:44:57 IST Report Abuse
hasan ....நெதன்யாஹூ
Rate this:
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
24-மே-202012:27:19 IST Report Abuse
Raman Muthuswamy சாணக்யா-சகுனி-கூனி இவர்களின் மொத்த உருவமான இவரை யாரும் எதுவும் செய்ய முடியாது .. வாழ் நாள் முழுவதும் இவர் ஆட்சி பீடத்தில் இருந்து வருவார்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-மே-202012:07:53 IST Report Abuse
Lion Drsekar உலகம் முழுவதுமே யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள், எந்த தண்டனையாக இருந்தாலும் ஏற்க தயாராகவும் இருப்பார்கள், யாரும் அவர்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் செய்து, அவர்களை உலகத்தின் தலைவனாக சித்தரித்து நீதித்துறையின் சட்ட ஆணையை எரிப்பது, பொது மக்களைக் கொள்வது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது, சமூக விரோத செயல்களில் ஈடுபடமாட்டார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X