பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Added : மே 24, 2020
Share
Advertisement

அய்யலுார்:'விவசாயிகளுக்கு கூடுதல் மின்திறன் மோட்டாரை கட்டணமின்றி பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்க வடமதுரை ஒன்றிய செயலாளர் காளை முதல்வருக்குஅனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் 21 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. மின் இணைப்பு பெற்றுள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் ஆழத்துக்கேற்ப மின் மோட்டாரின் திறனையும் அதிகப்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.

விவசாயிகள் பயன்படுத்தி வரும் குதிரை திறன் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கணக்கிட்டு, தத்கல் திட்டத்தின் மூலம் கட்டணம் செலுத்தவேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளனர். கொரோனா காரணமாக விவசாயிகள் விளைபொருள்களை விற்க முடியாமல் உள்ளனர். இந்த நேரத்தில் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, அனுமதி திறனைவிட கூடுதல் திறனுள்ள மின் மோட்டாரை கட்டணமின்றி பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X