திண்டுக்கல்லில் எண்ணெய் வித்து சாகுபடி 11 ஆயிரம் எக்டேர் இலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் எண்ணெய் வித்து சாகுபடி 11 ஆயிரம் எக்டேர் இலக்கு

Added : மே 24, 2020
Share

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 11 ஆயிரம் எக்டேரில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆண்டு தோறும் 7 ஆயிரம் எக்டேர் சாகுபடியாகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மழையின்மை, வறட்சியால் அவற்றின் சாகுபடி சரிந்து வருகிறது. அவற்றின் உற்பத்தியை பெருக்க அரசு முடிவு செய்துள்ளது.திண்டுக்கல்லில் அதிகம் நிலக்கடலை சாகுபடியாகிறது.

அதனால் பழைய வத்தலக்குண்டு, வேடசந்தூர், மா.மு.கோவிலூரில் நிலக்கடலை விதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. விதைகளை விவசாயிகளுக்கு வினியோகித்து சாகுபடியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தாண்டு நிலக்கடலை 9,170, எள் 1,350, சூரியகாந்தி 800, ஆமணக்கு 240 எக்டேர் உட்பட மொத்தம் 11 ஆயிரத்து 560 எக்டேரில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன் கூறியது: எண்ணெய் வித்து பயிர்கள் அதிக லாபம், மகசூல் தரக்கூடியதாக உள்ளன. அதனால் விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்ய வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X