மன்னவனுார் எழும்பள்ளம் குடிமராமத்து பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மன்னவனுார் எழும்பள்ளம் குடிமராமத்து பணி துவக்கம்

Added : மே 24, 2020
Share

கொடைக்கானல்:கொடைக்கானல் மன்னவனுார் எழும்பள்ளம் குளம் குடிமராமத்து பணி
ரூ. 90 லட்சம் நிதியில் துவங்கப்பட்டது.

மன்னவனுார் விவசாயிகள் பல ஆண்டுகளாக குளத்தை துார் வாரி, கசிவை சரிசெய்து, தடுப்பணையை உயர்த்த கோரிக்கை விடுத்தனர். சில மாதங்களுக்கு முன் அப்போதைய ஆர்.டி.ஓ., சுரேந்திரன் ஆய்வு செய்து அறிக்கை அளித்தார்.

தற்போது எழும்பள்ளம் குளத்தில் குடிமராமத்து பணி மேற்கொள்ள அரசு ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கியது. இதற்கான பூமிபூஜை மற்றும் பணிகள் துவங்கின. பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற் பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற் பொறியாளர் சவுந்திரம், உதவி பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் மன்னவனுார் எழும்பள்ளம் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இப்பணிகள் இரு மாதத்தில் நிறைவடையும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X