பழநி:பழநி பஸ்ஸ்டாண்டில் ஆதரவற்றோர் பலர் தங்கியுள்ளனர். இவர்களில் ஒரு முதியவரும், ஒரு பெண்ணும் நோய்வாய்ப்பட்டு, கவனிக்க ஆளின்றி கிடந்தனர்.
சப்கலெக்டர் உமாவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வி.ஏ.ஓ., கருப்புசாமி அவர்களை விசாரித்தனர். முதியவர் திருப்பூர் மாவட்டம் நரசிங்காபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் 60, எனத் தெரிந்தது. அப் பெண் பேச முடியாத நிலையில் இருந்தார். இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE