இந்தியா

நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள்

Added : மே 24, 2020
Share
Advertisement

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல நடைபயணமாக புறப்பட்டுச் சென்ற,வட மாநில தொழிலாளர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி, 'வெல்கம் ஆப்'பில்,விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தினர்.கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், புதுச்சேரியில் வேலை செய்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள்,வேலையை இழந்து சொந்த மாநிலங்களுக்குதிரும்பி செல்கின்றனர்.சில தினங்களுக்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில், கிருமாம்பாக்கம்,மணப்பட்டு, காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில்பணி புரிந்த ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த 69 பேர்நேற்று, தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தகவல் தெரவிக்காமல் நடைபயணமாகவே சொந்தஊருக்கு புறப்பட்டனர்.தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், விரைந்து சென்று, தவளக்குப்பம் அருகே சென்றுக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி,பஸ்சில் ஏற்றி மணப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் நிறுவன வளாகத்திற்கு அழைத்து சென்று தனித்தனியே அமர வைத்தனர். அவர்களிடம் எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் விசாரணை நடத்தினார். அப்போது, புதுச்சேரியில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயில் இயக்குவதாக கேள்விபட்டதால், புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து சென்றோம் என்றனர்.தொடர்ந்து பேசிய எஸ்.பி., புதுச்சேரியில் இருந்து ரயில்கள் இயக்கவில்லை. நீங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால்,அதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'வெல்கம்' ஆப்பில்,தங்களின் விவரங்களை பதிவு செய்தால், உங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.''மேலும், அவர்கள் வேலை செய்த தொழிற்சாலை நிர்வாகத்திடம்,தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடந்து கொண்டால்,கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X