இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

Added : மே 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.சட்டசபை கேபினட் அறையில் நடந்த இந்த கூட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலை வகித்தார்.தலைமைச் செயலர் அஸ்வனிக்குமார், கலெக்டர் அருண், சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா, சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சொந்த ஊர் திரும்பி கொண்டுள்ளனர். இவர்களால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பது குறித்தும், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்புபவர்கள் குறித்த விபரங்கள் முழுமையாக பரிமாறப்படாததாலும், வெளிமாநிலங்களில் இருந்து திரும்புபவர்கள் அனுமதி பெறாமல் புதுச்சேரிக்குள் வருவதால், கொரோனா பாதிப்பை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.புதுச்சேரி எல்லைகளில் கட்டுப்பாடுகள் இல்லாமல் வருகின்ற வாகனங்கள் தொடர்பாக போலீசாரின் கவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, கோரிமேடு எல்லையில் தினசரி 7,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் புதுச்சேரிக்குள் வருவது குறித்தும், இந்த வாகனங்களில் ஏராளமானோர் பயணிப்பது குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது.இ - பாஸ் இல்லாமல் வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; சோதனைக்கு பிறகே அனுமதிக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் குறித்த விபரங்களை, ஏர்போர்ட்டில் இறங்கிய உடனே தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என, சென்னை, திருச்சி, மதுரை, ஏனாம் அருகில் உள்ள ஐதராபாத்,மாகி அருகில் உள்ள கண்ணுார் விமான நிலையங்களுக்கு கடிதம் எழுத கலெக்டருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X