ஒயிட் டவுனில் மூடப்பட்ட ஓட்டலில்  காலாவதியான மதுபாட்டில்| Dinamalar

இந்தியா

ஒயிட் டவுனில் மூடப்பட்ட ஓட்டலில்  காலாவதியான மதுபாட்டில்

Added : மே 24, 2020
Share

புதுச்சேரி; மதுபான விற்பனை தொடர்பான புகார் விசாரணையில், மூடப்பட்ட ஓட்டலில் 30 பெட்டி காலாவாதியான மதுபாட்டில் இருப்பது தெரியவந்தது.கொரோனா ஊரடங்கு நேரத்தில், புதுச்சேரி ஒயிட் டவுன், துய்மா வீதியில் உள்ள ஒருவரது வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பதாக புகார் எழுந்தது. ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.போலீசார் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர், வெளிநாட்டில் இருந்ததால் ரவிமேனட் என்பரிடம் இடத்தை ஓட்டல் நடத்த வாடகைக்கு கொடுத்துள்ளார். ரவிமேனட் ஓட்டலை நடத்த முடியாமல், மேலாளர் ராஜேந்திரன்மலையப்பன் என்பரிடம் ஒப்படைத்துள்ளார்.இந்த நிலையில், இடத்திற்கான வாடகையை உயர்த்துவது தொடர்பாக, இடத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு காரணமாக கடந்த 2017 ம் ஆண்டு ஓட்டல் மூடப்பட்டது. அப்போது 30 பெட்டி் பீர் பாட்டில்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.இவை அனைத்தும் தற்போது காலாவதியாகிவிட்டன. அவற்றை அப்புறப்படுத்த கலால் துறைக்கு முறைப்படி கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் வழக்கு காரணமாக மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களையும் உரிமையாளர்கள் காண்பித்தனர். தற்போது கொரோனா காரணமாக, காலாவதியான மதுபானங்களை அப்புறப்படுத்த முடியாது என்பதால், கலால் துறை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X