இந்தியா

புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க கவர்னர் அனுமதி

Added : மே 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி மற்றும் காரைக்காலில், மது பானங்களின் மீது கோவிட் வரி விதிக்க கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, மதுபான கடைகள் திறப்பதில் பல நாட்களாக இருந்து வந்த இழுபறி முடிவுக்குவந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூடப்பட்ட மதுபான கடைகளை மீண்டும் திறப்பது என அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக,கோப்புகளை தயார் செய்து, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிய போது, தமிழகத்திற்கு இணையாக புதுச்சேரி, காரைக்காலிலும், கேரளாவிற்கு இணையாக மாகியிலும், ஆந்திராவுக்கு இணையாக ஏனாமிலும் மதுபானங்களின் விலையை உயர்த்தும் வகையில், கோவிட் வரி விதிக்கப்பட வேண்டும் என கவர்னர் வலியுறுத்தினார்.இதனையடுத்து, கவர்னர் கூறிய திருத்தங்களை ஏற்று நேற்று கோப்புகள் தயாரிக்கப்பட்டது. அமைச்சரவை கூடாமல் கோப்புகள் மட்டும் அனுப்பப்பட்டு, முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.அந்த கோப்புகள், இரவு 7.00 மணியளவில் ராஜ் நிவாசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை கவனமாக பரிசீலனை செய்து வருவதாகவும், இது தொடர்பான முடிவுகள் அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என கவர்னர் தெரிவித்திருந்தார். இதனால், இன்று (24ம் தேதி)மதுக்கடைகள் திறக்கப்படும் என்று பெரிய எதிர்பார்பு நிலவியது.இந்நிலையல், மதுபான கடைகளை திறப்பதற்கு கவர்னர் கிரண்பேடி நேற்றிரவு ஒப்புதல் அளித்தார். அந்த கோப்புகளின் விவரங்கள் இரவு 11.00 மணியளவில், ராஜ் நிவாசில் இருந்து வெளியிடப்பட்டது. தமிழகத்திற்கு இணையாக புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், மதுபான விலையை உயர்த்தும்வகையில், கொரோனா வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட தகவல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இன்று (24ம் தேதி) மதுக்கடைகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X