மாகாண கவர்னர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

வாஷிங்டன்: '' மக்கள் வழிபாட்டிற்காக, தேவாலயங்களை திறக்க மறுக்கும் மாகாண கவர்னர்கள், அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.



latest tamil news



அமெரிக்காவில், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலும், வரும் நவம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலையொட்டி, ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு, மாகாண அரசுகளை, டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவாஞ்சலிகல் கிறிஸ்துவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், மாகாண அரசுகள், தேவாலயங்களை திறக்க வேண்டும் என, டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:பல மாகாணங்கள், பார்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறந்துள்ளன. தேவாலய வழிபாடும், அத்தியாவசியமானது தான். மக்கள் ஒற்றுமைக்கு தேவாலயங்கள் உதவுகின்றன.
அதனால், தேவாலயங்கள், மசூதிகள், யூத வழிபாட்டு தலங்களை, மாகாண அரசுகள் உடனே திறக்க வேண்டும். தவறினால், அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். இதற்கிடையே, நோய் பரவல் தடுப்பு குழு, தேவாலயங்களை திறப்பது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுஉள்ளது. தேவாலயங்களில் குறைந்த அளவில் தான் மக்கள் கூட வேண்டும். முக கவசமுடன், நல்ல காற்றோட்டமான இடத்தில் பிரார்த்தனை நடத்த வேண்டும். குறைந்தபட்சம், ஒருவருக்கு ஒருவர், 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.


latest tamil news



ஜனநாயக கட்சி ஆளும், மின்னசோட்டா உள்ளிட்ட சில மாகாணங்கள், தேவாலயத்தை திறக்க மறுத்துள்ளன. ஆனால், அங்குள்ளோர், தடையை மீறி, தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
24-மே-202014:30:25 IST Report Abuse
Aaaaa இவர் இருவரும் எப்படி சரியாக ஜோடி சேர்ந்தார்கள் என வியப்பாக உள்ளது
Rate this:
Cancel
சு. நடராசன் - COOKEVILLE, TN,யூ.எஸ்.ஏ
24-மே-202006:56:35 IST Report Abuse
சு. நடராசன் இது இந்தியா இல்லை. மாநில அரசுகளை மிரட்ட முடியாது. இங்குள்ள அரசியல் சட்டம் அப்படி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-மே-202004:23:37 IST Report Abuse
J.V. Iyer இவரை தினமும் கூட்டம் கூடும் இடத்திற்கு முக கவசம் இல்லாமல் அனுப்பி வைக்கலாம். புத்தி வராவிட்டாலும், கரோனா வரும். தோற்றும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X