திருக்கழுக்குன்றத்தில் 12 டாஸ்மாக் கடைகள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கழுக்குன்றத்தில் 12 டாஸ்மாக் கடைகள் திறப்பு

Added : மே 24, 2020
Share

திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 12 டாஸ்மாக் கடைகள், நேற்று திறக்கப்பட்டன. 'குடி'மகன்கள், குடையுடன் வரிசையில் காத்திருந்து, டோக்கன் பெற்று, மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

திருப்போரூர் ஒன்றியத்தின், 16 டாஸ்மாக் கடைகளில், எட்டு கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டன. மற்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாததால், அந்த கடைகள் நேற்று, திறக்கப்படவில்லை; அவை, இன்று திறக்கப்படும் என, கூறப்படுகிறது.வெளி மாவட்ட, 'குடி'மகன்கள் வருவதை தடுக்க, திருப்போரூரில் காலவாக்கம், இள்ளலுார் இணைப்பு சாலை, திருப்போரூர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில், போலீசார், செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்கின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள, எலைட் கடை பகுதியில், அதிரடிப் படை வாகனத்தை நிறுத்தி, போலீஸ் எஸ்.பி., கண்ணன், குடிமகன்களை கண்காணித்தார். குடிமகன்கள், சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே வந்தனர். மாமல்லபுரம், முட்டுக்காடு, கேளம்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த சென்னை பகுதியினரை, போலீசார் திருப்பி அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X