பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதிகள் ஏற்பாடு

Added : மே 24, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : பிளஸ் 2 மேல்நிலை தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்காக, செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பிற்காக, இரு இடங்களில், மதிப்பீட்டு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.காஞ்சிபுரத்தில், மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும், எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி என, இரு இடங்களில், முகாம்கள் செயல்பட உள்ளன.விடைத்தாள் திருத்தும் மையங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து அறைகளிலும், தளவாடப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன; கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு உள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பஸ் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இதில், முக்கிய வழித்தடங்களான ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் பஸ்கள் இயக்கப்படும். மையங்களில், ஓர் அறையில், எட்டு பேர் மட்டுமே இருப்பர். அவர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படுவர்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X