மடத்தில் நுழைந்த மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடத்தில் நுழைந்த மூவர் கைது

Added : மே 24, 2020
Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரே, உதாசின்பாவாஜி என்ற மடம் உள்ளது. இதன் மேலாளராக இருந்த ஆறுமுகம், 48, என்பவர், சமீபத்தில், மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில், ஆறுமுகம், நண்பர்களான பச்சையப்பன், 50, பாண்டியன், 28, ஆகியோருடன், நேற்று முன்தினம் மடத்திற்கு சென்றனர். காவலாளி, அவர்களை அனுமதிக்காததால், அவரை தள்ளிவிட்டு, மடத்தில் புகுந்து, அங்கிருந்தோரிடம், மீண்டும் வேலை வழங்க வேண்டும் என, ஆறுமுகம் கோரினார்.இதையடுத்து, அத்துமீறி உள்ளே நுழைந்ததாக, மடத்தின் நிர்வாகிகள் அளித்த புகாரையடுத்து, மூவரையும், சிவகாஞ்சி போலீசார், நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X