செங்கையில் பாதிப்பு: 733 ஆக அதிகரித்தது| Dinamalar

தமிழ்நாடு

செங்கையில் பாதிப்பு: 733 ஆக அதிகரித்தது

Added : மே 24, 2020
Share
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 694 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; 298 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், நேற்று, பல்லாவரம் - 21 பேர்; தாம்பரம் - 13, செங்கல்பட்டு- மூன்று, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் - தலா ஒன்று, என, மொத்தம், 39 பேருக்கு, வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 694 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; 298 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று, பல்லாவரம் - 21 பேர்; தாம்பரம் - 13, செங்கல்பட்டு- மூன்று, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் - தலா ஒன்று, என, மொத்தம், 39 பேருக்கு, வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம், 733 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாதிப்புள்ள பகுதியில், தினமும் சுகாதார பணிகள், கிருமிநாசனி தெளிக்கவும், கபசுர குடிநீர் வழங்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.


திருவள்ளூரில் 22



திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று, 22 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு, 697 ஆக உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, நேற்று முன்தினம் வரை, 675 ஆக இருந்தது. நேற்று, கடம்பத்துார், திருவள்ளூர், சோழவரம், வில்லிவாக்கம், பூந்தமல்லி, ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 697 ஆக உயர்ந்தது. இதில், 263 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்; எட்டு பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது, 426 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காஞ்சிபுரத்தில் 13



காஞ்சிபுரம் மாவட்டத்தில், வைரஸ் தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, புதிதாக, 13 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.ஸ்ரீபெரும்புதுாரரில் உள்ள ஒரு நிறுவனத்தில் - ஏழு பேர்; காஞ்சிபுரம் - மூன்று; சாலமங்கலம் - இரண்டு; மொளச்சூர் - ஒன்று என, 13 பேருக்கு, தொற்று உள்ளது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 262 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X