பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

Added : மே 24, 2020
Share
Advertisement

உத்திரமேரூர் : தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 10 குடும்பத்தினர், கிணறு தோண்டும் பணிக்காக, நான்கு மாதங்களுக்கு முன், உத்திரமேரூர் அடுத்த பாண்டவாக்கம் கிராமத்திற்கு வந்தனர்.கிணறு அமைக்கும் பணி முடிந்ததும், சொந்த ஊருக்கு புறப்பட முயன்றனர். ஊரடங்கு உத்தரவால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல், பாண்டவாக்கத்திலேயே கூடாரம் அமைத்து தங்கிவிட்டனர்.

கையிருப்பில் இருந்த பணம் அனைத்தும் செலவழிந்து விட்டதால், சாப்பாட்டிற்கு வழியில்லாமல், 40க்கும் மேற்பட்டோர் தவித்து வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, உடனடியாக நிவாரணம் வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணைய் உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறி அடங்கிய தொகுப்பை, உத்திரமேரூர் தாசில்தார் கோட்டீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ஆகியோர், கொரோனா நிவாரணமாக, நேற்று முன்தினம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X