சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்கறி வியாபாரி கொலை; அண்ணன், தம்பி கைது

Added : மே 24, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் : காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன், தம்பியை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்த, காய்கறி வியாபாரியான சீனிவாசன் என்பவர், கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.இது குறித்து விசாரித்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, 35, அவரது தம்பி வெங்கடேசன், 32, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.கொலை குறித்து,

காஞ்சிபுரம் : காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன், தம்பியை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.

காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்த, காய்கறி வியாபாரியான சீனிவாசன் என்பவர், கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.இது குறித்து விசாரித்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, 35, அவரது தம்பி வெங்கடேசன், 32, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.கொலை குறித்து, போலீசார் கூறியதாவது: கொலைக்கு முந்தைய நாள், 70 வயது முதியவர் ஒருவரை, சீனிவாசன் அடித்ததாக கூறப்படுகிறது. அந்த முதியவர், இது குறித்து, முனியாண்டியிடம் கூறியுள்ளார்.

இதற்கு அடுத்த நாள், சீனிவாசன், முனியாண்டி, வெங்கேடசன் மூன்று பேரும், மது அருந்தினர். அப்போது, முதியவரை அடித்தது பற்றி, சீனிவாசனிடம், முனியாண்டி கேட்டுள்ளார். இதில், அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.இதையடுத்து, முனியாண்டியும் வெங்கடேசனும் சேர்ந்து, அருகே கிடந்த கட்டையால், சீனிவாசனை தாக்கி, கொலை செய்தனர்.இந்த கொலை தங்கள் மேல் விழாமல் இருக்க, சீனிவாசனுடன் தங்கியிருந்தோர் தான், அவரை கொலை செய்திருக்க வேண்டும் என கூறினர். ஆனால், இருவரும் முன் பின் முரணாக கூறி, பின், கொலை செய்தததை ஒப்புக்கொண்டனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X