பொது செய்தி

தமிழ்நாடு

18 சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

Added : மே 24, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : 'திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்ட, 16 சிறப்பு ரயில்களில் இதுவரை, 18 ஆயிரம் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்' என, கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், செங்கல் சூளைகளில், வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து பணி புரிகின்றனர். ஊரடங்கு உத்தரவால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.மத்திய, மாநில அரசின் அனுமதி அளித்ததையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் படிப்படியாக சிறப்பு ரயில் மூலம், அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த, 3,000 பேர் நேற்று, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு ரயில் மூலம் சென்றனர். கலெக்டர் மகேஸ்வரி, அனைவருக்கும் உணவு, பிஸ்கட் வழங்கி, வழியனுப்பி வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தற்காலிக தங்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, தினமும், உணவு அளிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை, 16 சிறப்பு ரயில்களில், 18 ஆயிரம் பேர், ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X