போலீசாரை கண்டித்து போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை கண்டித்து போராட்டம்

Added : மே 24, 2020
Share

குன்றத்துார் : குன்றத்துாரில், அரசு ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, வருவாய் துறையினர், பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே அணு சாலையை ஒட்டி, அனுமதியின்றி ஆழ்துளை கிணறு மூலம், லாரிகளில் தண்ணீர் எடுப்பதாக, வருவாய் துறையினருக்கு தகவல் வந்தது.நேற்று முன்தினம், அதிகாரிகள், அந்த இடத்திற்கு, 'சீல்' வைத்தனர். அப்போது, ஒருவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து, குன்றத்துார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால், இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து, நேற்று காலை, குன்றத்துார் தாசில்தார் அலுவலகம் முன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தியும், பயனில்லை.

இதையடுத்து, போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து, ஓரிரு நாட்களில் குற்றவாளியை கைது செய்து விடுவோம் என, உறுதியளித்தனர்.கொரோனா நேரத்தில், வருவாய்த் துறையினர், பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X