சென்னை : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம் மக்களுக்கு, வசந்தகுமார் எம்.பி., வாழ்த்து தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி தொகுதி காங்., - எம்.பி., எச்.வசந்தகுமார் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
நோன்பு இருந்து ரம்ஜான் திருநாளை கொண்டாடவிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு, என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.கொரோனாவால் பாதிப்புக்குள்ளான, ஆதரவற்ற பிற சமுதாய மக்களுக்கு, முஸ்லிம் பெருந்தகைகள், நாட்டின் பல இடங்களிலும், பல விதத்திலும் உறுதுணையாக இருந்ததை, நான் நன்கு அறிவேன்.
நல்லிணக்க நன்மறையை நடைமுறைப்படுத்தி, உலகத்திற்கு வழிகாட்டிய முஸ்லிம் பெருமக்களுக்கு இத்தருணத்தில் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE